உலகின் முன்னணி சமூக வலைத்தள நிறுவனமான மெட்டா நிறுவனம் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு பேஸ்புக், மெசேஜர் , இன்ஸ்டாகிராம் ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாட்டைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.அதன்படி பெற்றோர்கள் தங்களின் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கணக்குகளை நேரடியாக மேற்பார்வையிடக் கூடிய வசதிகளை அளித்துள்ளது.இதன்மூலம் பெற்றோர் அனுமதி இல்லாமல் சிறுவர்கள் பேஸ்புக், மற்றும் இன்ஸ்டாகிராமில் நேரலையில் தோன்றுவதற்கும் , மெசேஜரில் புகைப்படங்கள் பரிமாறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.பெற்றோர்கள் தங்களுடைய கணக்குகளுடன் பிள்ளைகளின் கணக்குகளை இணைத்து அதன் மூலம் செயற்படும் வகையில் இந்த புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதன் முதற்கட்டமாக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இந்த கட்டுப்பாட்டை முதலில் அமுல்படுத்தப்பட்டுத்தியுள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
Discover more from Taminews|Lankanews|Breackingnews
Subscribe to get the latest posts sent to your email.