சம்பத் மனம்பேரியால் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு தங்க நிற மெகசின்கள், ஒரு 9 மிமீ பிஸ்டல், ஒரு கைக்குண்டு மற்றும் 115, T-56 தோட்டாக்கள் ஆகியவை மித்தெனிய பகுதியில் உள்ள ஒரு காணியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.பெக்கோ சமன் மற்றும் சம்பத் மனம்பேரியவிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்த தகவல்களின்படி, இந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்டன.பெக்கோ சமன் இந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை 2 மாதங்களுக்கு முன்பு சம்பத் மனம்பேரியிடம் கொடுத்ததாகவும், அவை அவரது நெருங்கிய ஒருவரின் வீட்டில் புதைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.