Home » சம்மாந்துறையில் 20-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல்

சம்மாந்துறையில் 20-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல்

by newsteam
0 comments
சம்மாந்துறையில் 20-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல்

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை நகரப்பகுதியில் நேற்று (26) பொதுப் போக்குவரத்து சட்டங்களை மீறிய வழக்கில் 20க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டன.மோட்டார் சைக்கிள் ஆவணம் இல்லாமை, சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமை, பொதுவாக மோட்டார் சைக்கிளில் அதிகார பயணம் மற்றும் அதிவேக ஓட்டம் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும், சந்தேக நபர்கள் சட்ட நடவடிக்கை எடுத்தனர்.இச்சுற்றிவளைப்பு நடவடிக்கையை கல்முனை பிராந்திய உதவி பொலிஸ்டர் எம்.கே.இப்னு அஸார் வழிகாட்டலில் , சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதிப்குமாரின் தலைமையில் செய்தனர்.கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சான்றுப்பொருட்களை கல்முனை போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் சட்டப்படி நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.
மேலும் குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் சம்மாந்துறை, சவளக்கடை, மத்திய முகாம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!