Home » சிக்கன் உணவுக்குள் இருந்த கத்தி

சிக்கன் உணவுக்குள் இருந்த கத்தி

by newsteam
0 comments
சிக்கன் உணவுக்குள் இருந்த கத்தி

வீடியோவை பார்த்த பலரும் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பதிவிட்டனர்.
சமீப காலமாக உணவுகளை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வீட்டுக்கு வரவழைத்து சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த எமிலி என்ற பெண் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த சிக்கன் உணவுக்குள் கத்தி இருந்ததாக கூறி அதுதொடர்பான வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.வீடியோவுடன் அவரது பதிவில், சம்பவத்தன்று உள்ளூர் ஓட்டலில் சிக்கன் உணவு ஒன்றை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்திருந்தேன். உணவு வீட்டுக்கு வந்தவுடன் ஆர்வமாக சாப்பிட தொடங்கினேன். அப்போது, பல்லில் ஏதோ கடினமான பொருள் கடிபடுவதை உணர்ந்தேன். அது கேரட் துண்டுகளாக இருக்கலாம் என தவறாக நினைத்தேன். ஆனால் உணவை பிரித்து பார்த்தபோது அதற்குள் ஆரஞ்சு நிற கைப்பிடியுடன் கூடிய கத்தி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன் என பதிவிட்டிருந்தார்.அவரது இந்த வீடியோவை பார்த்த பலரும் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பதிவிட்டனர்.

Social Media Viral Video

You may also like

Leave a Comment

error: Content is protected !!