சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் பாட்ஷா பட வசனத்துடன் பதிவொன்றை இட்டு அவர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.அவர் தனது பதிவில், நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான். புத்தாண்டு நல்வாழ்த்துகள். என குறிப்பிட்டுள்ளார்.