Tuesday, January 7, 2025
Homeசினிமாபிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் மருத்துவமனையில்

பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் மருத்துவமனையில்

இசையமைப்பாளர் கங்கை அமரன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை அருகே படப்பிடிப்பில் பங்கேற்க சென்ற பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக மதுரை அழைத்து செல்லப்பட்டார்.இசையமைப்பாளர், இயக்குநர் என திரைப்படத்துறையில் தனக்கென தனி இடம் பிடித்தவர் கங்கை அமரன். இவர் பிரபல சினிமா கம்பெனி எடுத்து வரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்சமயம் சிவகங்கை மற்றும் மானாமதுரை ஆகிய பகுதிகளை சுற்றி நடைபெற்று வரும் நிலையில், அதில் பங்கேற்க அவர் மானாமதுரை சென்றுள்ளார்.அச்சமயம் திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து முதலுதவி சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து, மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்ததை தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு காரில் அழைத்து செல்லப்பட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments