16 வருடங்களின் பின்னர் இம்முறை இடம்பெறும் “சிறி தலதா வழிபாடு” நிகழ்வின் ஆரம்ப விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று (18) மதியம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கண்டிக்கு வந்திருந்தார்.பின்னர் ஜனாதிபதி சிறி தலதா வழிபாட்டில் ஈடுபட்டிருந்தார்.ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் இராஜதந்திரிகளும் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர்.பின்னர், பொது மக்களுக்காக ‘சிறி தலதா வழிபாடு’ ஆரம்பிக்கப்பட்டது.