சீனாவின் ஷான்சி மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு 2020-ம் ஆண்டில் மோசடி வழக்கில் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.அப்போது அவர் கர்ப்பமாக இருந்ததால் சிறைக்கு வெளியே தண்டனை அனுபவிக்க அனுமதிக்கப்பட்டார்.இப்படி ஒரு விலக்கு இருப்பதைப் பயன்படுத்தி, ஒவ்வொரு முறையும் தனது மகப்பேறு காலம் முடிவடையும்போது மீண்டும் மீண்டும் கர்ப்பம் தரித்து வந்துள்ளார்.இதன் விளைவாக, அவர் கடந்த 4 ஆண்டுகளில் 3 முறை கர்ப்பம் தரித்து ஜெயிலுக்கு போவதை தவிர்த்து வந்துள்ளார்.தான் பெற்ற 3 குழந்தைகளில் 2 குழந்தைகளை விவாகரத்தான கணவரிடமும், மேலும் ஒரு குழந்தையை அவரது சகோதரரிடமும் கொடுத்துள்ளார்.போலீசார் நடத்திய விசாரணையில், இதுபோல் தொடர்ந்து கர்ப்பம் தரிப்பதை அறிந்து கொண்டனர். இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.சீனாவின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, ஒரு பெண் குற்றவாளி கர்ப்பமாக இருந்தால் அல்லது ஒரு குழந்தைக்கு பாலூட்டினால் அவருக்கு வீட்டுக் காவல் வழங்கப்படலாம் என தெரிவிக்கிறது.