Home » சிறைவைக்கப்பட்ட சிறுவன் மாடியிலிருந்து குதித்து வைத்தியசாலையில் – சந்தேகநபர் தலைமறைவு

சிறைவைக்கப்பட்ட சிறுவன் மாடியிலிருந்து குதித்து வைத்தியசாலையில் – சந்தேகநபர் தலைமறைவு

by newsteam
0 comments
சிறைவைக்கப்பட்ட சிறுவன் மாடியிலிருந்து குதித்து வைத்தியசாலையில் - சந்தேகநபர் தலைமறைவு

கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள வீடொன்றின் இரண்டாம் மாடியிலிருந்து குதித்த 12 வயதான சிறுவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.சிறுவனை வீட்டில் சிறைப்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் தலைமறைவாகி இருப்பதாகவும், அவரைத் தேடிவருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கடந்த தினமொன்றில் குறித்த சிறுவன், ஏனைய சிறார்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது கருத்துமோதல் ஏற்பட்டுள்ளது.இதன்போது அருகிலிருந்த வீடொன்றின் வாயிற்கதவைப் பலமாகத் தட்டியதை அடுத்து, அந்த வீட்டின் உரிமையாளர் சிறுவனைப் பலவந்தமாகத் தூக்கிச் சென்று, வீட்டின் மாடியில் உள்ள அறையொன்றில் அடைத்துக் கதவைப் பூட்டியுள்ளார்.இதனால் அச்சமடைந்த சிறுவன் குறித்த அறையின் யன்னல் வழியாகக் குதித்ததை அடுத்து, கொழும்பு சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ள காவல்துறையினர், குறித்த சிறுவனைச் சிறைப்படுத்த உதவிய குற்றச்சாட்டில் ஒருவரைக் கைது செய்துள்ளனர். வீட்டின் உரிமையாளர் தொடர்ந்தும் தலைமறைவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!