Wednesday, April 16, 2025
Homeஇலங்கைசீனா மீனவர்களை பயன்படுத்தி இந்தியாவை அச்சுறுத்த முடியாது - யாழ். மாவட்ட மீனவர் சம்மேளனம்...

சீனா மீனவர்களை பயன்படுத்தி இந்தியாவை அச்சுறுத்த முடியாது – யாழ். மாவட்ட மீனவர் சம்மேளனம் தெரிவிப்பு

இந்திய அத்துமீறிய இழுவமடி படகுகளால் எமது மீனவர்கள் பாதிக்கப்படுவரும் நிலையில் அதனைப் பயன்படுத்தி சீனா இந்திய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடும் வகையில் எம்மை பயன்படுத்துவதற்கு இடமளிக்க மாட்டோம் என யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய அமைப்புக்களில் தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்தார்.நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வாரம் சீனா தூதரக அதிகாரிகளை எமது கடற் தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் சந்தித்தோம்.

அவர்களை சந்தித்ததன் நோக்கம் கடந்த கொரோனா காலங்கள் மற்றும் இந்திய இழுவைப் படகுகளினால் பாதிக்கப்பட்ட எமது மீனவர்களுக்கு பல்வேறுபட்ட உதவிகளை செய்தார்கள். அவர்கள் செய்த உதவிக்கு நன்றியை தெரிவித்ததோடு தொடர்ந்தும் இந்திய இழுவைமாடியால் பாதிக்கப்பட்டு வரும் எமது மீனவர்களுக்கு உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்தோம்.இதே கோரிக்கையை இந்தியா அரசிடமும் முன் வைத்திருக்கிறோம் யார் எமது மக்களுக்கு உதவிக்கரம் நீட்டினாலும் அதை நாம் பெற்றுக் கொள்ள தயாராக இருக்கிறோம்.

இந்தியா அத்துமீறிய இழுவைமடிப் படகுகளால் தொடர்ச்சியாக நாம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் சீனா எமக்கு உதவி செய்கிறோம் என எமது கடல் பிராந்தியத்தால் இந்திய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடும் வகையில் எம்மை பயன்படுத் எதிர்பார்த்தால் அதைச் செய்ய முடியாது.இந்தியா எமது அயல் நடு அது மாத்திரமல்ல எமது தொப்புள் கொடி உறவு என்ற ரீதியில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக எமது கடலை பயன்படுத்த அனுமதிக்கப் போவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்:  வானிலை தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!