ஓய்வூதியத் திணைக்களத்தின் தகவல் அமைப்புகள் மீதான சைபர் தாக்குதலில் எந்த தரவும் சேதமடையவோ அல்லது அழிக்கப்படவோ இல்லை என்று ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது.சைபர் தாக்குதலினால் எந்தவொரு இணையவழி தகவல் அமைப்பும் பாதிக்கப்பதை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது வழமைக்கு கொண்டுவந்துள்ளதாக அறிக்கை ஒன்றை வௌியிட்டு ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் ஓய்வூதியத் திணைக்களத்தின் தகவல் பாதுகாப்பு அமைப்புகளுக்கு எதிராக சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் திணைக்களத்தின் தகவல் அமைப்புகளை மீட்டெடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சைபர் தாக்குதலைத் தொடர்ந்து ஓய்வூதியத் திணைக்களத்தின் தகவல் அமைப்புகள் மீண்டும் செயல்படுத்தப்பட்டபோது எந்தத் தரவும் திருடப்படவில்லை அல்லது இழக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இருப்பினும், இந்த சைபர் தாக்குதல் தொடர்பாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவுடன் இணைந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Discover more from Taminews|Lankanews|Breackingnews
Subscribe to get the latest posts sent to your email.