Tuesday, August 26, 2025
Homeஇலங்கைஜனாதிபதிகளுக்கும் தனி சட்டம் இல்லை – அரச நிதி தவறாக பயன்படுத்தியதற்காக நடவடிக்கை: பிமல்

ஜனாதிபதிகளுக்கும் தனி சட்டம் இல்லை – அரச நிதி தவறாக பயன்படுத்தியதற்காக நடவடிக்கை: பிமல்

ரணிலின் வெளிநாட்டுப் பயணத்தின்போது அரச நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டமை நிரூபணமாகியுள்ளதன் பிரகாரமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.ரணில் விக்ரமசிங்கவிற்கு மாத்திரமல்ல, விரைவில் ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அரச உத்தியோகத்தர்களுக்கு உரித்தான சட்டமே ஜனாதிபதிகளுக்கும் உரித்தாகும், அவர்களுக்குப் பிரத்தியேகமான சட்டம் இல்லை, அதன் பிரகாரமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.மேலும், மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடி தொடர்பாக விரைவில் விசாரணை நடத்தப்படும் என்றும், அலோசியஸிடம் பணம் பெற்றவர்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.மக்கள் வழங்கியுள்ள ஆணையில், இது முக்கியமான விடயமாகும் எனக் குறிப்பிட்ட பிமல், அதனை நிறைவேற்றுவோம் எனக் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்:  போராட்டத்தில் எரிக்கப்பட்ட வீடுகளுக்காக எம்.பிக்கள் பெற்ற இழப்பீட்டு தொகை
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!