முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் வரப்பிரசாதங்களை ரத்துசெய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி முன்னாள் ஜனாதிபதிகளுக்கான உத்தியோகபூர்வ வீடுகள் அல்லது மாதக்கொடுப்பனவுகள் ரத்துச்செய்யப்படவுள்ளன.அத்துடன் அவர்களின் பிரத்தியேக செயலாளர்களுக்கான கொடுப்பனவுகள், உத்தியோகபூர்வ வாகனம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளும் ரத்தாகின்றன.அதேநேரம் அவர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவுகளும் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன் ரத்துசெய்யப்படும் என்று இந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.