Thursday, August 28, 2025
Homeஉலகம்ஜப்பானில் முதன்முறையாக ஸ்மார்ட்போன் பயன்பாட்டிற்கு நேரக் கட்டுப்பாடு – அபராதம் எதுவும் இல்லை

ஜப்பானில் முதன்முறையாக ஸ்மார்ட்போன் பயன்பாட்டிற்கு நேரக் கட்டுப்பாடு – அபராதம் எதுவும் இல்லை

ஜப்பானின் மத்தியப் பகுதியில் உள்ள ஒரு நகர நிர்வாகம், அங்கு வசிக்கும் சுமார் 69,000 குடியிருப்பாளர்களுக்கும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கு மட்டுப்படுத்த யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது.சாதன அடிமையாதலிலிருந்து மீள்வதற்கான திட்டமாக இது கருதப்படுகிறது.அத்துடன் நேரத்தைச் சிறந்த விடயங்களில் செலவிடுவதை ஊக்குவிப்பதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.ஜப்பானில் முதன்முறையாகச் செயற்படுத்தப்படவுள்ள இந்த திட்டம் இந்த வார ஆரம்பத்தில் டோயோக் நகராட்சி நிர்வாகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், தற்போது அதன் உறுப்பினர்களால் விவாதிக்கப்படுகிறது.சட்டமியற்றுபவர்கள் ஒப்புதல் அளித்தால் ஒக்டோபரில் இந்த விதி நிறைவேற்றப்படும்.எனினும் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், விதியை மீறுவோருக்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின்படி இரண்டு மணி நேரம் மாத்திரமே குறித்த நகரத்தின் பொதுமக்கள் தமது கைத்தொலைபேசிகளை பயன்படுத்துவர்.

இதையும் படியுங்கள்:  தென்கொரிய ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற லீ ஜே-மியுங், ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!