இன்றைய ராசிபலன் 25.03.2025, குரோதி வருடம் பங்குனி மாதம் 11, செவ்வாய்க் கிழமை, சந்திரன் மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம் ராசியில் உள்ள மிருகசீகம், திருவாதிரை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று வாழ்க்கைத் துணையுடன் உறவு இனிமையாக இருக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டை அலங்கரிப்பது, கட்டுமானம் தொடர்பான விஷயத்தில் கவனம் செலுத்துவீர்கள். அதற்காக பணம் அதிகமாக செலவிடுவீர்கள். உங்கள் வீட்டில் விருப்பமான புதிய பொருட்களை வாங்க நினைப்பீர்கள். எந்த வேலையை செய்தாலும் அதில் சிறப்பாக வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் கொண்டாட்டம், மகிழ்ச்சியும் இருக்கும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் இலக்கை அடைய கடின உழைப்பு தேவைப்படும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அண்டை வீட்டாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அமைதியை காப்பது நல்லது. உங்கள் பேச்சில் இனிமையை கடைப்பிடிக்கவும். நெருங்கிய உறவினர்களின் வருகை வீட்டில் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று கடுமையான போராட்டம் நிறைந்த நாளாக இருக்கும். பதற்றமான மனநிலையில் இருக்கும். இன்று மண அழுத்தமும், சோர்வும் அதிகரிக்கும். பொறுமையும், திட்ட உழைக்க வெற்றி கிடைக்கும். சக ஊழியர்களை விட்டுக் கொடுத்த செல்லவும். கடினமான நேரத்தில் சகோதரர்களின் ஆதரவை பெறலாம்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான நிகழ்வுகள் நடக்கும். உங்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு கண் தொடர்பான பிரச்சனைகள் தொந்தரவு தரும். உங்களின் வருமானம் உயர வாய்ப்புள்ளது. சக ஊழியர்களின் அன்பை, ஆதரவையும் பெறுவீர்கள்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று பணம் முதலீடு செய்யும் விஷயத்தில் மூத்த நபர்களின் ஆலோசனை பெற்று செயல்படுவோம். இன்று உங்கள் பேச்சில் இனிமையைக் கடைப்பிடிப்பது நல்லது. இதனால் பணியிடத்தில் சிறப்பான சூழல் நிலவும். திருமணத்திற்கு தகுதியானவர்களுக்கு நல்ல வரன் அமையும். தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். இன்று உங்கள் வேலையை முடிப்பதில் கவனமும் கடின உழைப்பும் தேவை.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். சமூக பணிகளில் மரியாதை கிடைக்கும். புதிய தொழிலை தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டு. முன்னர் செய்த முதலீடுகள் மூலம் இரட்டிப்பாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. இன்று குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் குறையும். யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். மாணவர்கள் படிப்பில் திருப்திகரமான முடிவை விடுவார்கள். வணிகம் தொடர்பான பயணங்கள் சிறப்பான பலனை தரும். காதல் வாழ்க்கையில் உள்ளவர்கள் பேச்சை கட்டுப்படுத்துவது நல்லது. தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உங்கள் துணையை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று சற்று சோகமான நாளாக இருக்கும். செய்து முடிக்க நினைத்த வேலையில் தடை ஏற்படும். உங்கள் மனப் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்வது நல்லது. பழைய கடனை திருப்பி செலுத்துவதற்கான வாய்ப்பு உண்டு. குடும்ப உறவினர்களுடன் தகராறில் ஈடுபட வேண்டாம். திருமணத்தில் இருந்த தடைகள் நீங்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையை முடிப்பதில் கவன குறைவு ஏற்படும். உறவினர்களின் உதவியால் சிறப்பான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பணியிடத்தில் மேலதிகாரிகளின் தலையிட்டால் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வுக்கான தடை ஏற்படலாம். இன்று நீதிமன்ற வழக்கு விஷயத்தில் எதிர்பார்த்து வெற்றி கிடைக்கும். சொத்து தொடர்பான சுயாதீனத்தைப் பரிசோதிக்கவும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். இன்று எந்த ஒரு பணி செய்தாலும் அதில் மரியாதை கிடைக்கும். புதிய தொழிலை தொடங்க நினைப்பவர்களுக்கு அதற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். முதலீடுகள் பலனை தரும். குடும்ப உறவில் உள்ள பிரச்சனைகள் நீங்கும். யாரிடமும் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உடல் நலம் சற்று மோசம் அடையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் எதிரிகளால் தொந்தரவு ஏற்படும். உங்கள் வேலைகளை கண்ணும் கருத்துமாக செய்து முடிக்கவும். இன்று வங்கி அல்லது நிறுவனத்திடம் கடன் வாங்க நினைப்பவர்களுக்கு அது கிடைக்கும். இன்று பெற்றோருடன் ஆலோசனை பெற்று முக்கிய முடிவுகளை எடுக்கவும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். வணிகத்தில் சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். குடும்ப உறுப்பினரின் உடல்நல குறைபாடு கவலை தரும். அது தொடர்பாக செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும்.