இன்றைய ராசிபலன் 21.03. 2025, குரோதி வருடம் பங்குனி மாதம் 7 வெள்ளிக் கிழமை, சந்திரன் விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷம் ராசியில் பரணி, கிருத்திகை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று கலவையான பலன்கள் கிடைக்கக்கூடிய நாள். இளைஞர்களுக்கு திருமணத்திற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் விருந்து விழாக்களில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. இன்று மகிழ்ச்சியான சில நல்ல செய்திகள் கிடைக்கும். உங்கள் மனக்குறை தீரும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று இயல்பில் சில நல்ல மாற்றங்கள் ஏற்படும். உங்களின் செயல்பாடு குடும்ப உறுப்பினர்களை ஆச்சரியப்படுத்தும். உங்கள் பேச்சில் இனிமையாக கடைப்பிடிக்க வேண்டியது நாள். சக ஊழியர்களுடன் இணக்கமான சூழல் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று ஆன்மீக பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுகிறீர்கள். நண்பர்கள், வாழ்க்கைத் துணைக்காக விலை உயர்ந்த பரிசுகளை வாங்க நினைப்பீர்கள். இன்று நிதி சார்ந்த சில நெருக்கடிகள் ஏற்படும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பங்கு சந்தை முதலீடுகள் திட்டமிடுபவர்களுக்குப் பெரிய லாபத்தைப் பெறலாம்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று செல்வாக்கு அதிகரிக்கும். அரசாங்கத் திட்டங்கள் மூலம் நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் முடித்து மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்கள் வேலைகளை செய்வதில் திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு உண்டு. இன்று குடும்ப உறவில் அன்பு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் தொடர்பாக எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும். புதிய வேலைகளை செய்ய திட்டமிடுவீர்கள்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று ஆன்மீக உணர்வு அதிகரிக்கும். இன்று பிறருக்கு உதவ நினைப்பீர்கள். முதலீடு தொடர்பாக உங்களுக்கு தேவையான அறிவுரை பிறரிடம் கேட்கத் தயங்காதீர்கள். உங்கள் வேலை தொடர்பாக பயணங்கள் செய்ய வேண்டியது இருக்கும். பிள்ளைகள் படிப்பில் சிறப்பான முன்னேற்றம் அடைவார்கள்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உடல் நலனில் கவனமாக இருக்கவும். வேலைப்பளு காரணமாக உடல் நல பிரச்சினைகள் ஏற்படும். உங்களின் வேலை, தொழில் தொடர்பாக உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதில் பொறுமையாக தீர்வு காணவும். முக்கியமான நேரத்தில் குடும்பத்தினரின் ஆலோசனை கிடைக்கும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான பலன்களை கிடைக்கக்கூடிய நாள். பிறருடன் சேர்ந்து செய்யக்கூடிய தொழிலில் விரும்பிய லாபத்தை பெறலாம். பழைய நண்பர்களுடன் புதிய தொழிலை தொடங்க திட்டமிடுவீர்கள். அதில் சகோதரர்களின் ஆலோசனை பெற்று செயல்படுவது நல்லது. திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்பு உண்டு. சமூக பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள். சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் தீரும். உங்கள் வேலை தொடர்பாக பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு என சில நல்ல செய்திகள் கிடைக்கும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்களுக்கு சிறப்பான நாளாக அமையும்.. இன்று உங்களின் குறைகள் தீரும். படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். காதல் வாழ்க்கையில் சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் வணிகம் தொடர்பாக சிறந்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். நிதிநிலை மேம்படும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று இனிமையான பலன்கள் கிடைக்கக்கூடிய நாள். காதல் வாழ்க்கை வாழ்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். வாழ்க்கையில் உறவில் இருந்த மனக்கசப்புகள் தீரும். வாங்குவது தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்திகள் கிடைக்கும். நண்பர்களுடன் அல்லது அண்டை வீட்டாருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். நிதிநிலை சற்று பாதிக்கப்படும். திட்டமிட்டு செலவு செய்வது நல்லது.