இன்றைய ராசிபலன் 23.03.2025, குரோதி வருடம் பங்குனி மாதம் 9 ஞாயிற்று கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷப ராசியில் உள்ள சேர்ந்த ரோகிணி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று திருமண வாழ்க்கையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அதனால் மன அழுத்தமான சூழல் இருக்கும். குடும்பத்தில் மூத்த நபர்களின் உதவிகள் கிடைக்கும். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மாணவர்கள் தேர்வில் எதிர்பார்த்த வெற்றி பெற கடின உழைப்பு தேவைப்படும். குடும்ப உறுப்பினர்களுடன் இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீரும். வியாபாரத்தில் முன்னேற்றத்தை கண்டு மகிழ்வீர்கள்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் புகழ் மற்றும் பெயர் அதிகரிக்கும். தொழில் தொடர்பாக புதிய திட்டங்களை தொடங்குவீர்கள். இன்று வேலைகளை முடிப்பதில் பரபரப்பான நாளாக இருக்கும். குடும்பத்திற்காக நேரத்தை ஒதுக்க முடியாமல் போகும். குடும்ப உறுப்பினர்களுடன் இருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். நிதிநிலை வலுவாக இருக்கும். முதலீடுகளை தவிர்க்கவும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க முடியும். இன்று உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வருவாய் இருக்கும். அரசாங்க தொடர்பான வேலைகள் எதிர்பார்த்த வகையில் முடியும். சகோதரர்களுடன் இணக்கமான சூழலை கடைப்பிடிக்கவும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று சில குடும்ப உறுப்பினர்களின் உடல் நலம் குறைபாட்டால் கொஞ்சம் பணம் செலவழிக்க வேண்டிய சூழல் இருக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். இன்று உங்கள் வீட்டை அலங்கரிப்பது, சுத்தப்படுத்துவது போன்ற விஷயங்களை ஆர்வத்துடன் செய்வீர்கள். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். குடும்பத்தினருடன் விருந்து விழாக்களில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று அரசியல் தொடர்புடையவர்களுக்கு பதவி கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று உங்களின் வருவாய் அதிகரிக்கும். நிதி நிலைமை சிறப்பானதாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். துணையுடன் இணக்கமான சூழல் உருவாகும். பிள்ளைகளின் திருமணம் தொடர்பாக நல்ல செய்திகள் கிடைக்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று முக்கியமாக நாளாக அமையும். பணியிடத்தில் உங்களுக்கு மரியாதை கிடைக்கும். பதவி உயர்வு மற்றும் புதிய பொறுப்புகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. இன்று வேலை பல காரணமாக குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை ஒதுக்க முடியாத சூழல் இருக்கும். உங்கள் பேச்சில் இனிமையை கடைப்பிடிக்கவும். அக்கம் பக்கத்தில் நடைபெற்றுக் கொடுத்து செல்லவும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று வேலை தேடுபவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். உங்களுக்கு சில நல்ல வாய்ப்புகள் தேடி வரும். நிதிநிலை மேம்படும். காதல் வாழ்க்கையில் அன்பும் அக்கறையும் அதிகரிக்கும். மனம் பலவீனமான நாளாக இருக்கும். படிப்பில் கூடுதல் கவனம் தேவை. தொழில் தொடர்பாக லாபம் கிடைக்கக்கூடிய நாள்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உடல்நிலை சற்று மோசமடையும். வெளி உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. இன்று வணிக ஒப்பந்தங்கள் ஒத்திவைப்பது நல்லது. இன்று விருந்தினர்களின் வருகை வீட்டில் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வாழ்க்கைத் துணைக்கு பரிசு வாங்கி கொடுக்க நினைப்பீர்கள். சிலரிடம் இருந்து நல்ல செய்திகள் தேடி வரும். உங்கள் நிதி நிலைமையும் மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் லட்சியங்களை நிறைவேற்றுவதில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரம் முன்னேற்ற முடியும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உறவினர்களிடம் பணப்பரிவர்த்தனை விஷயத்தில் கவனம் தேவை. இன்று கடன் வாங்குவது அல்லது கடன் கொடுப்பதை தவிர்க்கவும். இன்று புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வேலை தொடர்பாக திடீர் பயணம் செல்ல வாய்ப்பு உண்டு. உணர்ச்சிவசப்பட்டு எந்த ஒரு வேலை செய்வது அல்லது பேசுவதை தவிர்க்கவும். குடும்பத்தினருடன் முக்கிய விஷயங்களை விவாதிப்பீர்கள்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப வாழ்க்கையில் மாற்றங்கள் கொண்டு வர நினைப்பீர்கள். அரசாங்க வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவையும் பெறுவீர்கள். பிறர் நல்ல செய்திகள் தேடி வரும். சம்பள உயர்வுக்கான வாய்ப்பு உண்டு. இன்று புதிய வாய்ப்புகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொள்ளவும். பிள்ளைகளின் கல்வி தொடர்பாக இருந்த சிக்கல்கள் விலகும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று புதிய வண்டி, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டு. உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். பெற்றோரின் ஆசீர்வாதத்தால் இந்த வேலையை தொடங்கினாலும் அதில் வெற்றி கிடைக்கும். உடல் நலம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். இன்று வெளி உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.