Saturday, March 29, 2025
Homeஜோதிடம்இன்றைய ராசி பலன் : 26-03-2025

இன்றைய ராசி பலன் : 26-03-2025

இன்றைய ராசிபலன் 26.03.2025, குரோதி வருடம் பங்குனி மாதம் 12, புதன் கிழமை, சந்திரன் மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம் ராசியில் திருவாதிரை, புனர்பூசம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்களுக்கு கல்வி தொடர்பாக வெற்றிகள் கிடைக்கக்கூடிய நாள். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். இன்று உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நாள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து சில நல்ல செய்திகள் தேடி வரும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று மகிழ்ச்சி அதிகரிக்க கூடிய நாள். புதிய வண்டி, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டு. குடும்ப உறுப்பினர்களிடமிருந்து நல்ல ஆலோசனை கிடைக்கும். வேலை தொடர்பாக இன்று வீட்டை விட்டு வெளியூர் அல்லது வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால் குடும்பத்தைப் பிரிய கூடிய மனக்கவலை ஏற்படும். வியாபாரத்தில் எதிரிகளின் தொல்லை தீரும். உங்கள் விருப்பங்கள், ரகசியங்களைப் பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று தைரியம், வீரம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுடன் சுற்றுலா செல்ல வாய்ப்பு உள்ளது. குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை இன்று உங்களுக்கு உதவும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழலும், விருந்துக்கு ஏற்பாடு செய்யவும் வாய்ப்பு உள்ளது. அரசாங்கம் தொடர்பான நிலுவையில் உள்ள வேலைகள் முடிக்க முடியும்.பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் இனிமையான பேச்சால் சுற்றியுள்ளவர்களை வசீகரிக்க முடியும். உறவினர்களுடன் இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகள், பிரிவினை தொடர்பான பிரச்சனைகள் பேசி தீர்க்க முடியும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். அரசு தொடர்பான வேலை கிடைக்கும். உறவினர்களிடம் நீங்கள் எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். பேச்சில் இனிமையை கடைப்பிடிப்பது நல்லது.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று எதிர்மறை எண்ணங்களில் இருந்து விலகி இருக்கவும். இன்று சரியான முடிவு எடுக்க முடியாமல் சிரமப்படுவீர்கள். எதிர்பார்க்க வேலை கிடைக்காமல் போகலாம். பிள்ளைகளின் கல்வி தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வேலை தொடர்பான பயணங்கள் செல்ல வாய்ப்புள்ளது. சிந்தித்துச் செய்யக்கூடிய முதலீடுகள் எதிர்காலத்தில் இரட்டிப்பு பலன் தரும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வாழ்க்கையில் அதிக செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. திடீர் செலவுகள் ஏற்படும். அதனால் நிதி நெருக்கடியை சந்திக்க வாய்ப்புள்ளது. தொழில் தொடர்பான பண பரிவர்த்தனை விஷயங்களில் கவனம் தேவை. உங்கள் வேலை மற்றும் முடிவெடுக்கும் விஷயத்தில் கவனம் தேவை.

இதையும் படியுங்கள்:  பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து கியூபா நீக்கம்

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். விரும்பிய லாபத்தை பெறலாம். இன்று உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிரிகள் உங்களை பார்த்து பொறாமைப் பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் பிள்ளைகளிடம் இருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்ப பொறுப்புக்களைச் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். தாய்க்கு கண் தொடர்பான சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வாழ்க்கையில் கவலையும் மகிழ்ச்சியும் கலந்ததாக இருக்கும். இன்று சில பயனுள்ள செயல்களை செய்வீர்கள். இன்று சிலரின் பேச்சு உங்களை காயப்படுத்தும். வேலையை முடிப்பதில் வெற்றி பெறுவீர்கள். சொத்து வாங்குவது அல்லது விற்பது தொடர்பாக தந்தையின் ஆலோசனை பெறுவதோடு, சொத்து தொடர்பான ஆவணத்தைப் பரிசோதிக்கவும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று வேலைவாய்ப்புத் துறையில் நிதிநிலை வலுப்பெறும். இன்றும் உங்கள் வேலை அல்லது தொழில் தொடர்பான புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். நண்பர்களிடமிருந்து பரிசு கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களுடன் ஆன்மீக நிகழ்ச்சிகளைப் பங்கேற்க வாய்ப்புள்ளது. செல்வாக்கு மிக்க நபர்களை சந்திக்க வாய்ப்பு உண்டு. நீங்கள் பிறருக்கு கடன் கொடுத்திருந்தால் அதை திரும்ப பெற வாய்ப்பு உள்ளது. குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை எளிதாக நிறைவேற்ற முடியும்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். தந்தையின் கண்டிப்புக்கு ஆளாவீர்கள். இன்று உணவு விஷயத்தில் கவனம் தேவை. சிலருக்கு வயிறு தொடர்பான தொந்தரவுகள் ஏற்படும். நீண்ட கால நிலுவையில் உள்ள வேலைகளை முடித்து மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்களுடன் விருந்து விழாக்களில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று திருமண வாழ்க்கையில் நேர்மறையான பேச்சு, செயல்பாடு தேவை. வாழ்க்கைத் துணையின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படவும். இன்று குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். பெற்றோரின் ஆலோசனையை உங்களுக்கு உதவும். சக ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று உடல் நலனில் கவனமாக இருக்கவும். பழைய நோய்கள் மீண்டும் தொந்தரவு தர வாய்ப்புள்ளது. இன்று எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை. தொழில் தொடர்பான முயற்சிகளில் தாமதம் ஏற்படும். பிறரை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். குடும்ப உறவு மேம்படும். உறவினர்களிடமிருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!