இன்றைய ராசிபலன் 28.03.2025, குரோதி வருடம் பங்குனி மாதம் 14, வியாழக் கிழமை, சந்திரன் மீனம் ராசியில் சஞ்சரிக்கிறார். கடகம் ராசியில் ஆயில்யம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று காதல் வாழ்க்கையில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். பரஸ்பர நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் மனதில் புதிய ஆற்றல் உணர்வீர்கள். குழந்தைகள் தொடர்பாக சில நல்ல செய்திகள் கிடைக்கும். நீண்ட காலமாக வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசாங்க வேலைகள் சிறப்பாக முடிக்க முடியும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உடல் நலம் சற்று பலவீனமாக இருக்கும். அதனால் அதில் கவனம் தேவை. இன்று வெளி உணவுகளை தவிர்ப்பதோடு, உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். வாழ்க்கைத் துணையுடன் ஏற்படக்கூடிய வாக்குவாதம் மன அழுத்தத்தைத் தரக்கூடியதாக இருக்கும். இன்று பணிச் சுமை அதிகரிக்கும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப பொறுப்புகளை மும்முரமாக செய்து முடிப்பீர்கள். நிதி நன்மைகள் அதிகமாக கிடைக்கும். பண பரிவர்த்தனை விஷயத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டியாளர்களை கவனமாக அணுகவும். இது உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக அமையும். உடல் நலன் அக்கறை தேவை.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று தொழில், வியாபாரம் செய்யக்கூடியவர்கள் நல்ல வாய்ப்புகள் பெறலாம். உங்கள் பேச்சில் இனிமையை கடைப்பிடிக்கவும். நீங்கள் எதிர்பார்த்த வேலைகளை நினைத்த வகையில் செய்து முடிக்க முடியும். அரசியல் தொடர்புடையவர்கள் பேச்சில் கவனம் தேவை. உங்களின் ஆதரவு அதிகரிக்கும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று பிள்ளைகளின் கல்வி தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். பணியிடத்தில் மேலதிகாரிகளின் உதவியால் கடினமான சூழ்நிலை மாறும். இன்று வீடு, மனை வாங்கும் வாய்ப்பு உண்டு. பெற்றோரின் ஆசீர்வாதத்தால் செய்யக்கூடிய எந்த ஒரு வேலையும் சிறப்பான வெற்றி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நாள். இன்று ஆன்மிக நிகழ்ச்சியை கலந்து கொள்ள வாய்ப்பு உண்டு.ட்
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் பொருள் வசதிகள் அதிகரிக்கும். வருமானம் அதிகரித்தாலும், செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய நாள். இன்று நிதிநிலை கடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று பிறருடைய செல்வாக்கின் கீழ் எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். நண்பர்களுடன் வெளியே செல்ல திட்டமிடுவீர்கள்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று மிதமான நற்பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் சகோதரர்களுடன் சொத்து தொடர்பான தகராறுகள் ஏற்படும். தந்தையின் ஆலோசனைக்கு பின்னரே எந்த ஒரு முடிவையும் எடுக்கவும். நீங்கள் செய்யக்கூடிய தொழில் தொடர்பாக பிரச்சனைகள் சந்திக்க வேண்டும். திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும். காதலுக்கு குடும்ப உறுப்பினர்களின் அங்கீகாரம் கிடைக்கும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். இன்று கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. முக்கிய முடிவுகளை எடுப்பதில் பெற்றோரின் ஆலோசனை பெறுவது நல்லது. குழந்தையின் திருமணம் தொடர்பாக தடைகள் நீங்கும். குடும்ப உறுப்பினர்களுடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு உண்டு.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் தொழில் தொடர்பாக எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும். தடைப்பட்ட வேலைகளை முடிக்க முடியும். பண முதலீடு சார்ந்த விஷயத்தில் மிகவும் கவனமாக செயல்படவும். மாணவர்கள் படிப்பு தொடர்பாக முன்னேற்றத்தை அடைவார்கள். உயர் கல்விக்கான வாய்ப்புகள் அமையும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று எந்த ஒரு புதிய வேலையை செய்தாலும் அதில் சிறப்பான வெற்றியை எதிர்பார்க்கலாம். வாழ்க்கைத் துணையின் முன்னேற்றத்தை கண்டு மகிழ்வீர்கள். இன்று பரிசு கிடைக்க வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். தொழில் தொடர்பான போட்டிகள் அதிகரிக்கும். அதனால் மன அழுத்தமான சூழல் இருக்கும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நற்பலன்கள் கிடைக்கக்கூடிய நாள். அரசு தொடர்பான வேலைகள் முடிக்க முடியும். அரசு திட்டங்களால் நன்மை அடைவீர்கள். குடும்ப வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால், விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. இன்று வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அது தொடர்பாக செலவுகள் அதிகரிக்கும். இன்று வீட்டிற்கு விருந்தினர்களின் வருகை மகிழ்ச்சியை அதிகரிக்கும். இன்று வேலை, வணிகம் தொடர்பான பயணங்கள் செல்லத் திட்டமிடுவீர்கள். வண்டி வாகன பயன்பாட்டில் கவனம் தேவை.