இன்றைய ராசிபலன் 29.03.2025, குரோதி வருடம் பங்குனி மாதம் 15, சனிக் கிழமை, சந்திரன் மீனம் ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்மம் ராசியில் உள்ள மகம். பூரம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று கடின உழைப்பிற்கான முழு பலனை பெறுவீர்கள். தொழிலில் புதிய திட்டங்கள் வெற்றியை தரக்கூடியதாக இருக்கும். உங்கள் பிள்ளைகளிடமிருந்து மகிழ்ச்சியான செய்திகளை கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க முடியும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். செல்வாக்கு மிக்க நபர்களின் சந்திப்பு சாதகமான பலனைத் தரும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று சோகமான சில செய்திகள் கிடைக்கும். அது உங்கள் வருத்தத்தை அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். உங்கள் விருப்பங்கள், ரகசியங்களைப் பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வேலை தொடர்பாக சில நல்ல செய்திகளை கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வரன் தேடுபவர்களுக்கு நல்ல செய்தி பெறுவீர்கள். உங்கள் பேச்சுப் பிறரை காயப்படுத்தும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலா சில திட்டமிடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உங்கள் பேச்சில் இனிமையை கடைப்பிடிப்பது நல்லது. தேர்வுக்கு தயாராக கூடிய மாணவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று செல்வம் அதிகரிக்க கூடிய நாள். இன்று புதிய சொத்து வாங்குதல் தொடர்பாக நல்ல செய்தி கிடைக்கும். பெற்றோரின் அன்பு ஆசீர்வாதம் கிடைக்கும். பணியிடத்தில் சில நல்ல தகவல்களும், சாதகமான சூழலும் இருக்கும். திட்டமிட்டு செய்யக்கூடிய வேலையில் நிச்சயம் வெற்றி கிடைக்கும். உங்கள் முன்னேற்றத்திற்கான இடையூறு ஏற்படும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உடல் நலனில் கவனம் தேவை. உடல்நல பிரச்சினைகள் உங்கள் வேலையை செய்து முடிப்பதில் தடைகள் ஏற்படுத்தும். நீங்கள் செய்யக்கூடிய தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று குடும்பத்தினருடன் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சில தொந்தரவுகள் தரக்கூடிய சூழல் இருக்கும். ஏமாற்றம் அளிக்கும் செய்திகள் கிடைக்கும். பயணங்கள் செல்ல திட்டமிடுபவர்கள் மிகவும் கவனமாக இருக்கவும். குடும்ப சண்டைகள் தலை தூக்கும். இந்த வருத்தப்படக்கூடிய சில நிகழ்வுகள் நடக்கும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.உங்கள் கடின உழைப்பை அதிகரிப்பதால் வெற்றிகள் கிடைக்கும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று சட்டப் போராட்டங்களில் இருந்த தடைகள் நீங்கும். இன்று சில சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். தொழில் கூட்டாளிகளுடன் கவனம் தேவை. வெளியூர், வெளிநாட்டில் கல்வி கற்பது தொடர்பான முயற்சியில் வெற்றி கிடைக்கும். என்ற ஒரு வேலையும் அவசரமாக செய்வதை தவிர்க்கவும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று வணிகப் பயணங்கள் நற்பலனை தரும். புதிய திட்டங்கள் சரியாக செயல்படுத்தினால் மகத்தான பலனை பெறலாம். தொழிலில் விரும்பிய லாபத்தை பெறலாம். இன்று கடினமாக உழைக்க வேண்டிய நாள். முதலீடு தொடர்பான விஷயத்தில் நன்மைகள் நடக்கும். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். எதிர்பார்த்த சில நன்மைகள் நடக்கும். பிறரிடம் சிக்கியுள்ள பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வணிகம் தொடர்பான பயணங்கள் நற்பலனை தரும். இன்று முக்கிய வேலைகளில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று பிள்ளைகளின் செயல்பாடு மகிழ்ச்சியை தரும். அவர்களின் விஷயத்தில் கவனம் செலுத்தவும். உங்கள் செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் முதலீடு தொடர்பாக கவனம் தேவை. முடிந்தால் முதலீடுகளை தவிர்க்கவும். எதிர்பார்த்த லாபம் கிடைக்க கடின உழைப்பு தேவைப்படும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப பொறுப்பு அல்லது பணியிடத்தில் யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது. இல்லையெனில் மன அழுத்தமான சூழல் ஏற்படும். உங்கள் வீடு அல்லது பணியிடத்தில் சூழல் கடினமானதாக இருக்கும். உங்கள் கூட்டாளிகளின் மூலம் ஆதரவை பெறுவீர்கள்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று ஊக்கம் அளிக்கக்கூடிய தகவல்களைப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று பணப்பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. குறிப்பாக வீண் செலவுகளை தவிர்ப்பது அவசியம். அதன் மூலம் பணத்தை சேமிக்க முடியும்.