இன்றைய கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசி பலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.
மேஷத்தில் புதன், ராகு, ரிஷபத்தில் சூரியன், துலாமில் கேது, விருச்சிகத்தில் சந்திரன், மகரத்தில் சனி, கும்பத்தில் செவ்வாய், மீனத்தில் குரு, சுக்கிரன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர். இந்த கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசி பலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று சிலரால் தேவையற்ற மன வருத்தம் ஏற்படும். குடும்பத்தில் சிக்கல் ஏற்படும். நாளின் தொடக்கத்தில் இருந்த உடல் நலனில் கவனம் தேவை. முக்கிய பணிகளை முடிப்பதில் அக்கறை செலுத்தவும். நிதி ஆதாயங்கள் ஏற்படும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று வீட்டு தேவைகளை நிறைவேற்றுவதற்காக செலவுகள் அதிகரிக்கும். நிதிநிலை முன்னேற்றத்தால் நம்பிக்கை அதிகரிக்கும். பேச்சில் இனிமையை கடைப்பிடிக்கவும். வீட்டிற்கு நண்பர்கள், உறவினர்களின் வருகை செலவுகள் அதிகரிக்கும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று மனம் அமைதியற்ற நாளாக இருக்கும். திருமண வாழ்க்கையில் கவனம் தேவை. விட்டுக்கொடுத்த செல்லவும். தொழில் தொடர்பாக கலக்கமான சூழல் இருக்கும். சோம்பேறித்தனத்தை விடுத்து சுறுசுறுப்பாக செயல்படவும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் மும்முரமாக இருப்பீர்கள். நீண்ட கால ஆசைகள் நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள் இன்று குடும்ப பிரச்சினைகளால் மனக்கலக்கம் ஏற்படும்.. பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பொழுது போக்குக்காக அதிகமாக செலவிடுவீர்கள்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று பரபரப்பான நாளாக இருக்கும். இன்று பிறரிடம் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும்.உங்கள் பேச்சில் இனிமையை கடைப்பிடிக்கவும்.இன்று வியாபாரத்தில் நிதி ஆதாயம் பெருகும். கடன் வாங்குவதை தவிர்க்கவும். இன்று குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்,
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று நன்மைகள் அதிகரிக்கும். பணம் தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் வருமானத்தை பெறலாம். நீண்ட பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது. குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று கவனமாக செயல்பட வேண்டிய நாள். இன்று உங்கள் செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியம் சற்று பலவீனமாக இருக்கும். அன்றாட வேலைகளில் திருப்தி அடைவீர்கள். பணியிடத்தில் குழப்பமான சூழல் இருக்கும். ஆன்மீக வழிபாடு, சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் மகிழ்ச்சி நிறைந்த நாள் . வருமானம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த வேலைகள் முடிக்க முடியும். நிதி ஆதாயம் அதிகரிக்கும். உடல் நலம் தொடர்பான பிரச்சனைகள் இருக்கும். உங்கள் தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் பணியிடத்தில் பரபரப்பான நாளாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். உங்கள் வாழ்க்கை துணையை கொடுத்து சொல்லவும். பணியிடத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல் நலனில் அக்கறை செலுத்தவும்.
மகரம் ராசி பலன
மகர ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். இன்று அழகிய பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. பணியிடத்தில் வெற்றிகள் அதிகரிக்கும். நீங்கள் செய்யக்கூடிய வேலை அல்லது தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். நிதிநிலை மேம்படும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று வீட்டில் அல்லது பணியிடத்தில் உங்கள் பொறுப்புகள் நிறைவேற்றுவீர்கள் சரியான திட்டமிடல் அவசியம், சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். பயணங்கள் மகிழ்ச்சியை தொடரும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று மனதில் ஆன்மீக உணர்வு அதிகரிக்கும். இன்று உங்களுக்கு விருப்பமான வேலைகளை செய்து மகிழ்வீர்கள். இன்று உங்கள் கடின உழைப்பின் மூலம் ஆதாயம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் பெறலாம்.குடும்பத்தில் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். காதல் வாழ்க்கை பிரச்சினை நிறைந்ததாக இருக்கும்.