கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி பரந்தன் அரச விதை உற்பத்தி நிலையத்துக்கு முன்பாக இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.ஏ9 வீதி பேருந்து தரிப்பிடத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து நுவரெலியா சென்ற அரச பேருந்து நிறுத்தப்பட்டபோது, பரந்தன் பகுதியில் இருந்து வந்த கனரக டிப்பர் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரச பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.இதையடுத்து அதே பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் விபத்து ஏற்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளாகினர். இந்நிலையில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.சம்பவ இடத்துக்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார் 1990 அவசர நோயாளர் காவுவண்டிக்கு அறிவித்து விபத்தில் படுகாயமடைந்த நபரை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.