ட்ரம்ப் மிரட்டல்களுக்குப் பின்னர் இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், ரஷ்ய எண்ணெய் கொள்முதலை நிறுத்தியுள்ளன.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யாவுடனான ஒத்துழைப்புக்கு 100 வீத வரிகளை விதிப்பதாக அச்சுறுத்தியதைத் தொடர்ந்து, இந்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்திவிட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.60 மில்லியன் டொன் ஆண்டு திறன் கொண்ட இந்தியாவின் 20 சுத்திகரிப்பு நிலையங்களில் 10 ஐ இயக்கும் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஒயில் நிறுவனம், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தியுள்ளது.இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் மற்றும் மங்களூர் சுத்திகரிப்பு பெட்ரோ கெமிக்கல் ஆகியவையும், இறக்குமதியை நிறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒபேக் நாடுகளிடமிருந்து எண்ணெய் வாங்கும் சுத்திகரிப்பு நிலையங்கள் உடனடி சந்தையில் மாற்று வழிகளைத் தேடுகின்றன.இந்தியாவில் ரஷ்ய எண்ணெயை அதிகம் வாங்கும் தனியார் சுத்திகரிப்பு நிலையங்களான, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் நயாரா எனர்ஜி ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.