நாவலப்பிட்டியில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி அடகுவைக்கும் நிலையத்திற்குள் புகுந்து ரூ.3.5 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை கொள்ளையிட்ட சம்பவத்தில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் போதைப்பொருள் மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையானவர் என நாவலப்பிட்டி காவல்துறையினர் தெரிவித்தனர்.சந்தேக நபர் குறித்த பணத்தில் சுமார் ரூ.5 மில்லியன் மதிப்புள்ள உந்துருளியொன்றையும் கொள்வனவு செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.குறித்த சந்தேக நபர் கடந்த 3 மாதங்களாக நாவலப்பிட்டி நகரில் இடம்பெற்ற பல கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக நாவலப்பிட்டி காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.