ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று, தம்பதியினர் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மனைவி ஸ்தலத்தில் உயிரிந்துள்ளார்.பேருவளையில் இருந்து களுத்துறை நோக்கி இன்று (01) காலை மோட்டார் சைக்கிளில் தம்பதியினர் பயணித்துள்ளனர்.அதே திசையில் பயணித்த பேருந்து ,மோட்டார் சைக்கிளில் மோதியதில், பெண்ணின் தலை முன் இடது சக்கரத்தின் கீழ் நசுங்கியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தில் , கணவர் படுகாயமடைந்ததாகவும் பயாகலை பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தில் உயிரிழந்தவர், மஹாவில, மஹவத்த, ஹபுருகல பகுதியைச் சேர்ந்த சி. சுசிலாவதி என்ற பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தனியார் பேருந்து ஒன்று, தம்பதியினர் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மனைவி உயிரிழப்பு
11
previous post