Monday, July 28, 2025
Homeஇலங்கைதமிழீழ விடுதலைப்புலிகள் எதையும் செய்யவில்லை – வரதராஜ பெருமாள் கடும் விமர்சனம்

தமிழீழ விடுதலைப்புலிகள் எதையும் செய்யவில்லை – வரதராஜ பெருமாள் கடும் விமர்சனம்

இலங்கை அரசியலமைப்பில் உள்ள அதிகாரப்பகிர்வு செயற்படுத்தப்பட வேண்டும் என இணைந்த வடகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்.வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில், தமிழ் அரசியல் கட்சிகள் பெரும்பாலும் அதிகாரப்பகிர்வையே விரும்புகின்றன.இந்த விடயம் தொடர்பில், தாம் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் அரசியல் பிரமுகர்களை சந்தித்துக் கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்தநிலையில், தமிழர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்காக தமிழ் கட்சிகள் இந்தியாவுடனான தங்களது ஈடுபாட்டை அதிகரிக்க வேண்டும்.இந்தியாவில் வசிக்கும் ஏதிலிகள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.முகாம்களில் தங்கியிருக்கும் ஏதிலிகள், இலங்கைக்கு திரும்பி வருகைதருவதற்கான கட்டுப்பாடுகளையும் தளர்த்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.இலங்கையை பொறுத்தவரையில், தற்போதைய ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினர் அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்கு உறுதிபூண்டுள்ளனர்.அதேநேரம் அது அவர்களின் பொறுப்பு எனவும் இணைந்த வடகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்.அதிகாரப்பகிர்வு இலங்கையை மேலும் ஒற்றுமைப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை அதிகாரப்பகிர்வை பொறுத்தவரை தமது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தமது ஆதரவை வெளிப்படுத்தியபோதும், தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழர்களுக்காக எதனையும் செய்யவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்:  மன்னாரில் காற்றாலை மூலம் 50 மெகாவாட் மின்சாரம் : தனியார் நிறுவனத்திற்கு வழங்க அனுமதி
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!