Site icon Taminews|Lankanews|Breackingnews

தமிழ் அரசியல் கட்சிகள், பொதுஅமைப்புகளின் முழு ஆதரவுடன் யாழ்ப்பாணத்தில் பேரணி

தமிழ் அரசியல் கட்சிகள், பொதுஅமைப்புகளின் முழு ஆதரவுடன் யாழ்ப்பாணத்தில் பேரணி

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கிட்டுப்பூங்கா முன்றலில் இருந்து செம்மணி நோக்கி பேரணி ஒன்று ஆரம்பமாகியுள்ளது.உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கிறோம், தமிழின அழிப்புக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கும், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்தும் சர்வதேச சுயாதீன விசாரணையைக் கோரி வட கிழக்கில் இன்றைய தினம் ஆர்ப்பாட்ட பேரணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.பொது அமைப்புக்களும் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள ஒட்டுமொத்த தமிழ்க் கட்சிகளும் இப்போராட்டத்திற்கு தமது முழுமையான ஆதரவை வழங்கி கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version