உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மக்களுக்கு மிகுந்த கண்ணியத்துடனும் வசதிகளுடனும் தலதா மாளிகையை வழிபடுவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர், கலாநிதி ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார்.தலதா கண்காட்சி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இன்று (10) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை விசேட தலதா கண்காட்சி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.