Home » திரிபோஷ உற்பத்திக்கு தேவையான தரப்படுத்தப்பட்ட சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதி

திரிபோஷ உற்பத்திக்கு தேவையான தரப்படுத்தப்பட்ட சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதி

by newsteam
0 comments
திரிபோஷ உற்பத்திக்கு தேவையான தரப்படுத்தப்பட்ட சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதி

திரிபோஷ உற்பத்திக்கு தேவையான தரப்படுத்தப்பட்ட சோளத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேலதிக போசாக்கு உணவாக அனைத்து கர்ப்பணித் தாய்மார், பாலூட்டும் தாய்மார் (சிசுவுக்கு 6 மாதங்களாகும் வரை) மற்றும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள 06 மாதங்களுக்கு கூடிய சிசுக்கள் மற்றும் 05 வயதுக்கு குறைவான பிள்ளைகளுக்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சினால் திரிபோஷா வழங்கப்படுகிறது. திரிபோஷ உற்பத்திக்காக சோளம் மற்றும் சோயா போஞ்சி மூலப்பொருட்களாக பாவிக்கப்படுகின்றன. இலங்கை திரிபோஷா லிமிட்டட் நிறுவனத்தின் வருடாந்த சோளத்தின் தேவை 18,000 மெட்ரிக் தொன்கள் ஆகும் என்பதுடன், மாதாந்த தேவை 1,500 மெட்ரிக் தொன்கள் ஆகும். உள்நாட்டில் தேவையான தரப்படுத்தப்பட்ட சோளத்தை பெற்றுக்கொள்வதில் நிலவும் அசௌகரியங்களை கவனத்தில் கொண்டு, திரிபோஷா உற்பத்தியை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்காக ஒரு ஆண்டுக்குத் தேவையான உரிய தரப்படுத்தப்பட்ட சோள தொகையை இலங்கை திரிபோஷா லிமிட்டட் இறக்குமதி செய்வதற்கு குறித்த நிறுவனத்துக்கு இறக்குமதி உரிமத்தை வழங்குவதற்காக தரப்படுத்தப்பட்ட சோளத்தை இறக்குமதி செய்தலுக்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!