திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியில் இருந்து தனது மகளை ஏற்றிச் செல்ல காத்திருந்த தந்தை மீது முச்சக்கர வண்டியில் வந்த சிலர், கடந்த 07ம் திகதி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பான சிசிரிவி காணொளி இன்று வெளியாகி உள்ளது.இந்த தாக்குதலின் பின்னர், பாதிக்கப்பட்ட நபர் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில், பாடசாலை விடுகின்ற நேரங்களில் மாணவிகளின் பாதுகாப்பு கருதி, பாடசாலைகளின் முன்பாக பொலிஸாரை கடமையில் நிறுத்துமாறு பெற்றோர் தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைத்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
திருகோணமலையில் பாடசாலை முன் தந்தை மீது கொடூர தாக்குதல் – CCTV வீடியோ வெளியாகி பரபரப்பு
67