திருகோணமலை மாநகர சபையின் மேயர் பதவிக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய மாநகர சபை உறுப்பினர் கந்தசாமி செல்வராஜாவின் பெயரை கட்சி முன்மொழிய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது,இதனை இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசன் ஊடகங்களுக்கு (28) தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாநகரசபைக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட 9 உறுப்பினர்கள் எனது தலைமையில் கூடி,ஜனநாயக முறைப்படி இந்த தீர்மானத்தை மேற்கொண்டனர்.இதே போன்று மாவட்டத்தில் கட்சி அதிக ஆசனங்களை வெற்றி பெற்ற சபைகளுக்கான தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவுகளுக்கும் ஜனநாயக முறைப்படி நடைபெறும் ”எனவும் தெரிவித்தார்.