Home » திருமண செலவுக்காக ரூ.52 லட்சத்தை திருடிய வாலிபர்

திருமண செலவுக்காக ரூ.52 லட்சத்தை திருடிய வாலிபர்

by newsteam
0 comments
திருமண செலவுக்காக ரூ.52 லட்சத்தை திருடிய வாலிபர்

தெலுங்கானா மாநிலம் மேடக் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சமீபத்தில் திருமண நிச்சயம் நடந்தது. திருமண செலவிற்கு என்ன செய்வது என ஆனந்த் யோசித்து வந்தார்.இந்த நிலையில் கொம்பள்ளி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பவானிசங்கர் வீட்டில் கொள்ளையடிக்க முடிவு செய்தார். அதன்படி அவருடைய வீட்டுக்குள் புகுந்து ரூ.52.50 லட்சம் கொள்ளையடித்தார். இதன் மூலம் தனது திருமணத்தை ஆடம்பரமாக நடத்த முடிவு செய்தார்.பவானிசங்கர் கொடுத்த புகாரின் பேரில் பெட்பஷீரா பாத் போலீசார் திருட்டு சம்பந்தமாக விசாரணை நடத்தி வந்தனர்.இதில் ஆனந்த் வீடு புகுந்து திருடியதுதெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். திருடப்பட்ட பணத்தில் ரூ.43 லட்சத்தை மீட்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!