Site icon Taminews|Lankanews|Breackingnews

தீபாவளி பண்டிகை – சபரகமுவ தமிழ் பாடசாலைகளுக்கு 21ஆம் திகதி விடுமுறை

தீபாவளி பண்டிகை – சபரகமுவ தமிழ் பாடசாலைகளுக்கு 21ஆம் திகதி விடுமுறை

தீபாவளியை முன்னிட்டு தீபாவளிக்கு மறுதினமான எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சபரகமுவ மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் சபரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சாமர பமுனுஆராச்சிக்கு விடுத்த ஆலோசனைக்கமைய இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.இந்தநிலையில், எதிர்வரும் 21 ஆம் திகதி தமிழ் பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்படுவதால் அதற்குப் பதிலாக எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலைகள் நடத்தப்படும் என்று சபரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சாமர பமுனுஆராச்சி தெரிவித்துள்ளார்.

Exit mobile version