Home » துறைமுகங்கள், விமான நிலையங்களில் PCR பரிசோதனை

துறைமுகங்கள், விமான நிலையங்களில் PCR பரிசோதனை

by newsteam
0 comments
துறைமுகங்கள், விமான நிலையங்களில் PCR பரிசோதனை

இந்தியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கருத்திற் கொண்டு துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் தொற்றாளர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என இலங்கை பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சிலாபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய, அந்தச் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இதனைத் தெரிவித்தார்.

இவ்வாறான இடங்களில் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இலங்கையில் கொரோனா பரவலின் வேகம் அதிகரிக்கும் அபாயமுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தற்போது வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்படுபவர்களிடமே பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.ஆனால் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற இடங்களில் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!