மஹியங்கனை, கிராதுருகொட்ட பிரதான வீதியில் நேற்று (26) இரவு சிற்றூர்ந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் 11 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மஹியங்கனை காவல்துறையினர் தெரிவித்தனர்.பதுளை, கைலகொட பகுதியை சேர்ந்த ஒரு குழுவினர் இந்த விபத்தில் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.10 வயது குழந்தை உட்பட ஐந்து ஆண்களும் ஆறு பெண்களும் காயமடைந்தவர்களில் அடங்குவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தில் சிற்றூர்ந்தின் சாரதி படுகாயமடைந்துள்ளார்.
அனுராதபுரத்தில் இருந்து பதுளைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, சிற்றூர்ந்தின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விபத்தின்போது காயமடைந்தவர்களை காலவ்துறையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தில் சிற்றூர்ந்து பலத்த சேதமடைந்துள்ளதுடன், காயமடைந்தவர்களில் பலரது நிலை கவலைகிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தூக்கக் கலக்கம் காரணமாக மரத்தில் மோதிய சிற்றூருந்து – 11 பேர் மருத்துவமனையில்
10
previous post