Home » தென் கொரியாவில் விமான விபத்து – 23 பேர் பலி

தென் கொரியாவில் விமான விபத்து – 23 பேர் பலி

by newsteam
0 comments
தென் கொரியாவில் விமான விபத்து - 23 பேர் பலி

தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று ஓடுபாதையிலிருந்து விலகித் தரையில் மோதி விபத்துக்குள்ளானதில், இதுவரை 23 பேர் உயிரிழந்தனர் என வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.தாய்லாந்திலிருந்து திரும்பிய ஜெஜு ஏர் நிறுவனத்தின் விமானம், முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும்போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 175 பயணிகள், 6 விமானப் பணியாளர்களுடன் சென்ற விமானமே விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் 23 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம், ஓடுபாதையில் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்தது தான் விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

You may also like

Leave a Comment

error: Content is protected !!