Home » தென் கொரிய விமான நிலையத்தில் திடீரென தீப்பிடித்த விமானம்

தென் கொரிய விமான நிலையத்தில் திடீரென தீப்பிடித்த விமானம்

by newsteam
0 comments
தென் கொரிய விமான நிலையத்தில் திடீரென தீப்பிடித்த விமானம்

தென் கொரியாவின் பூசன் நகரில் உள்ள கிம்ஹே சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹாங்காங் நோக்கி இன்று பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்யும் பயணிகள் 169 பேர், விமான பணியாளர்கள் 7 பேர் என அனைவரும் விமானத்தில் ஏறினர்.விமானம் புறப்பட தயாரானபோது விமானத்தின் ஒரு பகுதியில் திடீரென தீப்பற்றியது. பின்னர் மளமளவென விமானத்தின் மற்ற பகுதிகளுக்கும் தீ பரவியது. இதனால் பயணிகள் பீதி அடைந்தனர். பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் என அனைவரும் அவசரகால எஸ்கேப் ஸ்லைடு (ஊதப்பட்ட ஸ்டைடு) மூலமாக பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

எனினும் மூன்று பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்துக்கான காரணம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடந்த மாதம் 29-ம் தேதி முவான் விமான நிலையத்தில் பயணிகள் விமானம் தரையிறங்கியபோது லேண்டிங் கியர் வேலை செய்யாததால் விமானம் கான்கிரீட் அமைப்பில் மோதி தீப்பிடித்தது. இந்த விபத்தில் 179 பேர் உயிரிழந்தனர். 2 பேர் மட்டுமே உயிர்பிழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!