யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் பழுதடைந்த தெரு மின்விளக்குகளை பழுதுபார்க்கும் போது மின்சாரம் தாக்கி காயமடைந்த ஊழியருக்கு வேதனம் வழங்கப்பட்டுள்ளது.நல்லூர் பிரதேச சபையின் பணியாளருக்கு மனிதாபிமான உதவியாக நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர், நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் மற்றும் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்களின் பங்களிப்புடன் ஒரு தொகை பணத்தினை நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் வழங்கி வைத்துள்ளனர்.அத்துடன் குறித்த பணியாளர் பணிக்கு மீண்டும் திரும்பும் வரைக்கும் அவருக்குரிய மாதாந்த வேதனத்திற்குரிய பணத்தினையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதன் பிரகாரம் தொடர்ச்சியாக 3 மாதங்களுக்கு அவருக்குரிய மாதாந்த வேதனப் பணத்தினை நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் மயூரன் தன்னுடைய நண்பர்கள் மூலம் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளார்.