Wednesday, April 16, 2025
Homeஇலங்கைதேசிய போக்குவரத்து வைத்திய நிறுவக செயலமர்வு

தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவக செயலமர்வு

தேசிய போக்குவரத்து நிறுவக செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (08.04.2025) மு. ப 10.30 மணி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இச் செயலமர்வில் தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் தலைவர் வைத்திய கலாநிதி அரோஷா வித்திய பூஷண அவர்களும், பணிப்பாளர் திரு. ரி. ஜி. லக்ஷ்மன் அவர்களும் கலந்து கொண்டனர்.இதன்போது தலைமையுரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் 06 வீதி சமிக்கைகளே உள்ளதாகவும், மேலும் தேவைப்பாடுகள் உள்ளதாகவும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும்இவ் விடயம் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், இச் செயலமர்வு கலந்துகொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்களும் ஏனையவர்களும் பயனடையக்கூடிய வகையில் அமையும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் தலைவர் வைத்திய கலாநிதி அரோஷா வித்திய பூஷண அவர்களால் வீதிப் போக்குவரத்து விதிகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.மோட்டார் போக்குவரத்து உதவி ஆணையாளர் திரு. அ. கிருபாகரன், வீதிப் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவக செயலமர்வு

இதையும் படியுங்கள்:  முச்சக்கரவண்டி மேலதிக உதிரிபாகங்களை அகற்றுவதில்லை - பொலிஸ்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!