Monday, July 14, 2025
Homeஇலங்கைதேசிய வைத்தியசாலையில் அடாவடி செய்த பெண் வைத்தியர் மனநல சிகிச்சைக்கு அனுமதி

தேசிய வைத்தியசாலையில் அடாவடி செய்த பெண் வைத்தியர் மனநல சிகிச்சைக்கு அனுமதி

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் அலுவலகத்திற்குள் இன்று (14) காலை வலுக்கட்டாயமாக நுழைந்து அவரது நாற்காலியில் அமர்ந்த ஒரு பெண், மனநல சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த பெண் தெஹிவளை பகுதியில் உள்ள ஒரு சுகாதார நிறுவனத்தில் பணிபுரியும் வைத்தியர் என்பது பின்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இன்று காலை 10 மணியளவில் தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் நாயகத்தின் அலுவலகத்திற்கு வந்த அந்த பெண், பிரதிப் பணிப்பாளர் நாயகத்தை அச்சுறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.பிரதிப் பணிப்பாளர் நாயகம், தனது இருக்கையை விட்டு வெளியேறியவுடன், அந்த இருக்கையில் அமர்ந்த வைத்தியர் தனது கடமைகளை முறையாகச் செய்ய முடியாவிட்டால், அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூச்சலிட்டதாக வைத்தியசாலை தெரிவிக்கப்பட்டுள்ளது.வைத்தியசாலை அதிகாரிகள் வந்து வைத்தியரை தேசிய வைத்தியசாலையின் மனநலப் பிரிவுக்கு அழைத்துச் சென்று ஒப்படைத்தனர்.அவருக்கு மனநலப் பிரச்சினை உள்ளதா என்பதைக் கண்டறிய விசாரணைகள் நடந்து வருவதாக வைத்தியசாலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:  எரிபொருள் விலை குறைக்கப்பட்டிருந்தாலும் பேருந்து கட்டணத்தில் மாற்றமில்லை
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!