இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 103 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.துடுப்பாட்டத்தில் அந்த அணியின் சிவம் டுபே ஆட்டமிழக்காது 31 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார்.பந்துவீச்சில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரைன் 3 விக்கெட்டுகளையும் வருண் சக்கரவர்த்தி மற்றும் ஹர்சித் ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.தொடர்ந்து 104 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 107 ஓட்டங்களைப் பெற்று இலக்கை அடைந்தது.துடுப்பாட்டத்தில் சுனில் நரைன் 44 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றதுடன் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவானார்.
தொடர் தோல்வியை சந்தித்த சென்னை அணி
RELATED ARTICLES