Home » நாடு முழுவதும் பொது இடங்களில் முககவசங்களை அணிய அறிவுறுத்து

நாடு முழுவதும் பொது இடங்களில் முககவசங்களை அணிய அறிவுறுத்து

by newsteam
0 comments
பொது இடங்களில் முககவசங்களை அணிய அறிவுறுத்து

நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொவிட் வைரஸின் மாறுபாடு உருவாகும் போக்கு இருப்பதாக சுகாதார சேவைகள் மேம்பாட்டு பணியகம் எச்சரித்துள்ளது.எனவே , அலுவலக வளாகங்களிலும் அனைத்து பொது இடங்களிலும் முகக்கவசங்களை அணியுமாறு தங்கள் ஊழியர்களுக்கு அறிவிக்குமாறு மேல் மாகாண தலைமைச் செயலகம் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளது.இது தொடர்பாக, மேல் மாகாணத்தின் துணைப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) பி.என். தம்மிந்த குமார கையொப்பமிட்ட கடிதம் மேற்கு மாகாணத்தில் உள்ள அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.சுவாச நோய் அறிகுறிகள் இருப்பின் முக கவசம் அணிய வேண்டும் என கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நல வைத்தியர் தீபால் பெரேரா பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.குறிப்பாக, சன நெரிசலான இடங்களுக்குச் செல்லும்போது, ​​நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், முக கசவம் அணிவது முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார்

You may also like

Leave a Comment

error: Content is protected !!