Home » நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

by newsteam
0 comments
நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.அதன்படி, 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து மே மாதம் 28 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 10 இலட்சத்து 17 ஆயிரத்து 4 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 199,958 ஆகும்.அதன்படி, ரஷ்யாவிலிருந்து 110,220 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 95,435 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 68,435 சுற்றுலாப் பயணிகளும்,பிரான்ஸிலிருந்து 56,728 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 56,145 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 43,484 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!