நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் போஞ்சி 565 ரூபாவிற்கும் , ஒரு கிலோகிராம் கரட் 865 ரூபாவிற்கும் , ஒரு கிலோகிராம் கத்தரிக்காய் 375 ரூபாவிற்கும், ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 265 ரூபாவிற்கும் , மற்றும் ஒரு கிலோகிராம் தக்காளி 525 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றன.நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் கரட் 1000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.அத்தோடு, ஒரு கிலோகிராம் கத்தரிக்காய் 700 ரூபாவிற்கும், ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 600 ரூபாவிற்கும், ஒரு கிலோகிராம் போஞ்சி 660 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.