Home » நீண்ட காலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இளம்பெண் வியாபாரி கைது

நீண்ட காலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இளம்பெண் வியாபாரி கைது

by newsteam
0 comments
நீண்ட காலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இளம்பெண் வியாபாரி கைது

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறந்துறைச்சேனை பிரதேசத்தில் போதைப் பொருள் விற்பனை செய்யும் வீடு ஒன்றை நேற்று (11) இரவு முற்றுகையிட்ட போது 5 கிராம் 670 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் பெண் வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து பிறைந்துறைச்சேனை பிரதேசத்திலுள்ள குறித்த வீட்டை சம்பவ தினமான நேற்று இரவு பொலிஸார் சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர்.இதன் போது போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரியான பெண்ணிடம் இருந்து 5 கிராம் 670 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளை மீட்டதையடுத்து அவரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் 25 வயதுடைய பெண் என்று நீண்ட காலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் அவரது உறவினர்கள் 4 பேர் ஏற்கனவே போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இவர் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!