Home » நீதிமன்ற வளாகத்தில் வளாகத்தில் புகுந்த பாம்பு

நீதிமன்ற வளாகத்தில் வளாகத்தில் புகுந்த பாம்பு

by newsteam
0 comments
நீதிமன்ற வளாகத்தில் வளாகத்தில் புகுந்த பாம்பு

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டின் 27-வது அறையில் இன்று வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது கோர்ட்டு வளாகத்திற்குள் 2 அடி நீளம் கொண்ட பாம்பு ஒன்று நுழைந்தது. இதனை அங்கிருந்த காவல் அதிகாரி பார்த்து அனைவரையும் எச்சரித்தார்.பாம்பை பார்த்தவுடன் வழக்கு விசாரணைக்காக வந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடத் தொடங்கினர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டு, வழக்கு விசாரணை பாதியில் நிறுத்தப்பட்டது. கோர்ட்டு அறைக்குள் இருந்த கோப்புகளுக்கு இடையில் அந்த பாம்பு பதுங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து பாம்பு பிடிப்பவர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் வந்து தேடியபோது பாம்பை காணவில்லை. சுமார் ஒரு மணி நேரம் தேடிய பிறகும் பாம்பு பிடிபடாததால், சிறிது நேரத்திற்கு பிறகு வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டது. சுவற்றில் இருந்த ஓட்டை வழியாக அந்த பாம்பு வெளியேறி சென்றிருக்கலாம் என்று அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர். அருகில் காட்டுப் பகுதி இருப்பதால் அங்கிருந்து சில நேரம் பாம்புகள் கோர்ட்டு வளாகத்திற்குள் வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!