Site icon Taminews|Lankanews|Breackingnews

நீர்கொழும்பில் பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா கலந்த மாத்திரைகள் விற்பனை – மருந்தக ஊழியர் கைது

நீர்கொழும்பில் பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா கலந்த மாத்திரைகள் விற்பனை – மருந்தக ஊழியர் கைது

கஞ்சா கலந்த மதனமோதக வில்லைகளை பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து விற்பனை செய்த மருந்து விற்பனை நிலைய ஊழியரை நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.இந்த மருந்து விற்பனை நிலையத்திற்கு அருகிலுள்ள பாடசாலை மாணவர்கள் அடிக்கடி வந்து செல்வதாகவும், அவர்கள் ரகசியமாக ஒருவகை மாத்திரையை வாங்கி கடையை விட்டு வெளியேறும்போது இந்த மாத்திரைகளை வாயில் போட்டுக் கொள்வதாகவும், நீர்கொழும்பு பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு பொறுப்பதிகாரிக்கு தகவல் கிடைத்தது.தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த மருந்தகத்தை சோதனையிட்ட வேளை , கஞ்சா கலந்த ஒரு தொகை மதனமோதக வில்லைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.அதனை அடுத்து, குறித்த மருந்தாக ஊழியரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version