நெடுந்தீவைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் பிரசவத்தின் பின் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். நெடுந்தீவைச் சேர்ந்த கில்மன் நோபட் தர்சிகாமேரி (வயது 25) என்பவரே நேற்று (09) யாழ். போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது உயிரிழந்துள்ளார்.குறித்த இளம் தாயின் மரணத்திற்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் வலிப்பு நோய் காரணம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர்.குறித்த பிரசவத்தின் போது இளம் தாய் பிரசவித்த பெண் குழந்தை வைத்தியசாலையில் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சடலம் வைத்திய பரிசோதனைக்குப் பின் இன்று (10) உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
நெடுந்தீவைச் சேர்ந்த இளம் தாய் பிரசவத்தின் போது யாழ் வைத்தியசாலையில் உயிரிழப்பு
108