தெனியாய பிரதேசத்தில் இருந்து மாத்தறை நோக்கி, இரண்டு நோயாளிகளை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் , விபத்துக்குள்ளான நிலையில் அதிலிருந்து இரண்டு பீர் கேன்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக மொரவக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர்.தெனியாய அடிப்படை வைத்தியசாலைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் மாத்தறை பொது மருத்துவமனைக்கு நோயாளிகளை ஏற்றிச் சென்ற போது மொரவக்க அது எல பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி ஒரு வீட்டின் நுழைவாயிலில் மோதியுள்ளது.விபத்தை அடுத்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் பின்னர் பொலிஸில் சரணடைந்த நிலையில் அவர் விபத்தின் போது குடிபோதையில் இருந்தாரா என்பது தொடர்பான விசாரணைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையின் தடயவியல் வைத்தியரிடம் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஆம்புலன்ஸில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பீர் கேன்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.