Site icon Taminews|Lankanews|Breackingnews

பல்கலைக்கழகத்திற்கு முன்னால் போதைப்பொருள் விற்பனை – இளைஞன் கைது

பல்கலைக்கழகத்திற்கு முன்னால் போதைப்பொருள் விற்பனை - இளைஞன் கைது

கொழும்பு – மாலம்பே பிரதேசத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த இளைஞன் ஒருவன் வலான ஊழல் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வலான ஊழல் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.கைதுசெய்யப்பட்டவர் கடுவலை பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய இளைஞன் ஆவார்.சந்தேக நபரான இளைஞனிடமிருந்து 480 கிராம் கொக்கேயின் , 71 கிராம் குஷ் மற்றும் 50 கிராம் ஹேஷ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.இது தொடர்பில் வலான ஊழல் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version